‘தல’ அஜீத் நடித்து வரும் ‘வேதாளம்’ படத்தின் படப்பிடிப்பு இன்று அல்லது நாளை முடிந்துவிடும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் நாளை வியாழக்கிழமை அதிகாலை 12 மணிக்கு ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது. இந்த டீசரை வரவேற்க அஜீத் ரசிகர்கள் இணையத்தில் தயாராகி வருகின்றனர். மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அவர்கள் சாய்பாபாவின் தீவிர பக்தர் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே தீபாவளி தினத்தில் வெளியாகும் என கூறப்பட்ட இந்த படம், வியாழக்கிழமை செண்டிமெண்ட்டின்படி, நவம்பர் 5ஆம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் ஆகும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளிவரும் டீசரில் இருக்கும் என கூறப்படுகிறது.

அக்டோபர் 8ஆம் தேதி டீசர் வெளியீடு, அக்டோபர் 16ஆம் தேதி பாடல் வெளியீடு மற்றும் நவம்பர் 5ஆம் தேதி படத்தின் வெளியீடு என அடுத்தடுத்து அஜீத் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் நிலையில், இந்த படத்தில் தன்னுடைய காட்சிகளின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துவிட்டதாக நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறும்போது, ‘வேதாளம்’ படக்குழுவினர்கள் அனைவருக்கும் எனது நன்றி. இந்த படத்தில் பணிபுரிந்தது மிகவும் மகிழ்ச்சியாகவும், நல்ல அனுபவமாகவும் இருந்தது’ என்று கூறியுள்ளார்.

மேலும் நேற்றுடன் இந்த படத்தில் நடித்த மற்றொரு நடிகையான வித்யூலேகா ராமனின் டப்பிங் பணிகள் முடிவடைந்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி நேற்றுடன் இந்த படத்தில் இருந்து விடைபெற்றார் பிரபல வில்லன் நடிகர் ராகுல்தேவ்.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்சிங், சூரி, தம்பிராமையா, ராகுல்தேவ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

English Summary : Ajith’s Vedhalam film teaser will be released early morning tomorrow.