வேலூர்: தமிழகத்தில் சில பகுதிகளில் உச்சக்கட்ட வெயில் கொளுத்தி வருகிறது. 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலில், வேலூர் இப்போது தகிக்கிறது. கடந்த 4-ம் தேதி 97.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது.
ஒரே நாளில், 5 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் அதிகரித்து, 102.6 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு வெயில் சுட்டெரித்ததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வெளியே செல்ல அவஸ்தைப்பட்டு வீட்டிலேயே முடங்கி போயுள்ளனர்.