B7yRqKmCEAEpqzy

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் என ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த விஜய் ஆண்டனி, தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் ‘பிச்சைக்காரன்’. இந்த படத்தில் விஜய் ஆண்டனி பிச்சைக்காரராக நடித்தாலும், உண்மையில் அவரது கேரக்டர் பிச்சைக்காரர் இல்லையாம். ஒரு முக்கிய விஷயத்தை கண்டுபிடிக்க அவர் பிச்சைக்காரர் வேடத்தில் நடிப்பதுதான் கதை என்றும், அந்த முக்கிய விஷயம் என்ன? என்பதை படக்குழுவினர் சஸ்பென்ஸாக வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான ‘பாபி ஜசூஸ்’ (Bobby Jasoos) என்ற படத்தில் பிரபல நடிகை வித்யாபாலன், பிச்சைக்கார வேடம் ஏற்றபோது, உண்மையான பிச்சைக்காரர்களுடன் இணைந்து நடித்தது போன்று, விஜய் ஆண்டனியும் இந்த படத்திற்காக உண்மையான பிச்சைக்காரர் போன்று கூவம் ஆற்றில் எவ்வித அருவருப்பும் இன்றி இறங்கி நடித்துள்ளார். இந்த காட்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் காசி தியேட்டர் அருகில் உள்ள கூவம் ஆற்றில் நடந்தது.

விஜய் ஆண்டனி உண்மையில் பிச்சைகாரர் இல்லை என்பதை கண்டுபிடிக்கும் கதாநாயகி, அடுத்து என்ன செய்கிறார்? என்பதை த்ரில்லிங்குடம் இந்த படம் விளக்கவுள்ளதாக இயக்குனர் சசி கூறியுள்ளார். இவர் ஏற்கனவே பூ, 555 போன்ற பல படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary:Vijay Antony in the guise of the beggar suspense