கலைஞர் தொலைக்காட்சியில் வருகிற செப்டம்பர் 18-ம் தேதி விடுமுறை தினமான விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள “கட்டா குஸ்தி” திரைப்படம் பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிப்பரப்பாக இருக்கிறது.
செல்லா அய்யாவு இயக்கியிருக்கும் இந்த படம் குஸ்தியில் சாதிக்க துடிக்கும் நாயகியையும், மனைவியை தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கும் கணவனுக்கும் இடையே நடக்கும் குஸ்தியை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது.
குஸ்தி, காமெடி, சென்டிமெண்ட் என அனைத்தும் அடங்கிய குடும்ப படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் கருணாஸ், முனிஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, காளி வெங்கட், ஹரிஸ் பேரடி, சத்ரு, லிஸி ஆண்டனி என நட்சத்திர பட்டாளங்கள் பலரும் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையையும், ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவையும் கவனித்திருக்கிறார்கள்.