தமிழகத்தில் 5 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (செப்.5) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, செவ்வாய்க்கிழமை (செப்.5) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
செப்.6 முதல் 8 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மழை அளவு (மிமீ):
திருப்போரூா் (செங்கல்பட்டு) 90, தேவாலா (நீலகிரி), மாமல்லுபுரம்(செங்கல்பட்டு), செங்கல்பட்டு தலா 80,கூடலூா் பஜாா் (நீலகிரி), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), மேல் கூடலூா் (நீலகிரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), காஞ்சிபுரம் தலா 70, மணம்பூண்டி (விழுப்புரம்), காட்டுக்குப்பம் (காஞ்சிபுரம்), நாலுமுக்கு (திருநெல்வேலி), டிஜிபி அலுவலகம் (சென்னை) தலா 60.
சென்னை பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானமுதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை:
இலங்கை கடலோரப்பகுதிகள் அதனையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.5) சூறாவளிக்காற்று மணிக்கு 65 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும்.