பிப்ரவரி 4, திங்கள்
அமாவாசை. திருவோண விரதம். மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் வைரக்கீரிடம் சாற்றி அருளல். மஹோதய புண்யகாலம். திருநெல்வேலி நெல்லையப்பர் பத்ர தீபம்.
பிப்ரவரி 5, செவ்வாய்
திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் காலை சூர்ணாபிஷேகம், இரவு வேணுகோபாலர் திருக்கோலமாய்க் காட்சி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடி அருளல்.
பிப்ரவரி 6, புதன்
சந்திர தரிசனம். வாசவி அக்னிப் பிரவேசம். மௌன சுவாமிகள் குரு பூஜை. திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் தேரோட்டம், திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. அப்பூதியடிகள் நாயனார் குரு பூஜை. வைத்தீஸ்வரன் கோவில் செல்வமுத்துக்குமார சுவாமி திருவீதியுலா.
பிப்ரவரி 7, வியாழன்
திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் தொட்டித் திருமஞ்சனம், இரவு குதிரை வாகனத்தில் திருவீதியுலா. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
பிப்ரவரி 8, வெள்ளி
சதுர்த்தி விரதம். திருமொச்சியூர் ஸ்ரீ சிவபெருமான் திருவீதியுலா. மெலட்டூர் ஸ்ரீவிநாயகப் பெருமான் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிரஹத்குசாம்பிகை புறப்பாடு. அஹோபிலமடம் ஸ்ரீமத் 6வது பட்டம் ஸ்ரீ அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம்.