தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ‘அம்மா’ பெயரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா மெடிக்கல், அம்மா காய்கறிக்கடை, உள்பட பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக இயங்கி வரும் நிலையில் விரைவில் அம்மா திரையரங்குகள் சென்னையை அலங்கரிக்க உள்ளன. சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் திரையரங்கு கட்டணங்கள் மிக அதிக அளவில் உள்ள நிலையில் மலிவு விலை கட்டணத்தில் சென்னையில் அம்மா திரையரங்கங்களைத் திறப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த திரையரங்குகள் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே திறக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறைந்த கட்டணத்தில் திரைப்படம் காண்பதற்காக அம்மா திரையரங்கம் அமைக்கப்படும் என 2014-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி நிதிநிலையில் அறிவிக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து தொடர்ந்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் ராமாவரம், புளியந்தோப்பு, பேசின்பாலம், பாடி, தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளிலும், மாநகராட்சி கட்டடமான ஷெனாய் நகர் அம்மா கலையரங்கம், சர்.பிட்டி தியாகராயர் அரங்கம் ஆகியவற்றிலும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: திரைப்பட அரங்க கட்டுமான நிபுணர்கள் மூலம் விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு திரையரங்குகளை திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறினார்.
English Summary : When opened ‘Amma Theaters in Chennai? Chennai Corporation officials