anna arch Flyover_5816சென்னை அண்ணா நகரில் உள்ள அண்ணா வளைவு மேம்பாலப் பணிகள் வரும் செப்டம்பர் மாத இறுதியில் நிறைவடையும் என நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் இந்த பணி முடிவடையவுள்ளதால் அப்பகுதியின் டிராபிக் தொல்லைக்கு விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அண்ணா வளைவு மேம்பால பணிகள் நீண்ட நாட்களாக முடிவடையாமல் உள்ளது குறித்து திமுக உறுப்பினர் க.பொன்முடியின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது: நிலம் கையகப்படுத்துதல் போன்ற ஆரம்பகட்ட பணிகளை முடித்த பிறகே அண்ணா மேம்பாலம் கட்டும் பணிகளைத் தொடங்க வேண்டும் என்ற நிலையில் நிலத்தின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு மூன்றரை ஆண்டுகள் நடந்து வந்ததால் போரூர் மேம்பாலப் பணிகள் தாமதமாகின. தற்போது வழக்குகள் முடிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி பணிகள் ஏற்கெனவே முடிந்துள்ளன. மீதமுள்ள ஒரு பகுதியின் பணிகள் வரும் செப்டம்பர் இறுதியில் நிறை டையும்.

English Summary : When the Anna arch Flyovers Ends Work? Assembly Minister for Information