download (1)முக்கிய தலைவர்கள், ஆன்மீக பெரியோர்கள் ஆகியோர்களின் பிறந்த நாளில் தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூடுவது கடந்த பல வருடங்களாக வழக்கமாக இருந்துவரும் நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மகாவீர் ஜெயந்தி வருவதால் அன்றைய தினம் சென்னையின் அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.கோவிந்தராஜ் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்று கூறுவதாவது: வரும் ஏப்ரல் 19-ம் தேதி செவ்வாய்க்கிழமை, மகாவீர் ஜெயந்தி தினத்தன்று சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், கிளப்புகள் மற்றும் ஹோட்டல்கள் சார்ந்த பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினம் மதுபானங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English summary : Wine shops in the Chennai district collector ordered to close on 19 April