கடந்த சில நாட்களுக்கு முன்னர் டுவிட்டரில் இருந்து விலகிய பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா நேற்று முதல் மீண்டும் புதிய டுவிட்டர் கணக்கின் மூலம் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

யுவன்ஷங்கர் ராஜாவின் சகோதரரும், ‘மாஸ்’ படத்தின் இயக்குனருமான வெங்கட்பிரபு மீண்டும் யுவன்ஷங்கர்ராஜா டுவிட்டரில் இணைந்ததை உறுதிப்படுத்தி உள்ளார். யுவன்ஷங்கர் ராஜாவின் புதிய அதிகாரபூர்வமான டுவிட்டர் கணக்கு @thisisysr என வெங்கட்பிரபு கூறியுள்ளார்.

மீண்டும் புதிய உற்சாகத்துடன் டுவிட்டரில் இணைந்துள்ள யுவனுக்கு அவருடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தற்போது ‘மாஸ்’ படத்தின் பின்னணி இசை பணியில் பிசியாக இருக்கும் யுவன் இந்த படத்தின் பணிகள் முடிந்தவுடன் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தின் பின்னணி இசையை ஆரம்பிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: Yuvan Shankar Raja joined in Twitter again.