சென்னை: கல்லுாரி மாணவர்களுக்கான, மத்திய அரசின் உதவித் தொகைக்கு, &’ஆன்லைன்&’ பதிவு துவங்கியுள்ளது. பள்ளி படிப்பை முடித்து, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசின் சார்பில், பல்வேறு கல்வி உதவித் தொகை திட்டங்கள் அமலில் உள்ளன. இதில், ஆண்டுதோறும் மாணவர்கள்,
ஆன்லைனில் பதிவு செய்த பின், உதவித் தொகை வழங்கப்படும். இந்த அடிப்படையில், ஏற்கனவே இரண்டு ஆண்டுகளாக, உதவித் தொகை பெற்ற, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை பெறுவதற்கான பதிவு நீட்டிப்பு துவங்கியுள்ளது. அதேபோல், புதிதாக உதவித் தொகை பெறவும், ஆன்லைன் பதிவு துவங்கியுள்ளது. இதற்கு, https://scholarships.gov.in/ என்ற மத்திய அரசின் இணையதளத்தில், அக்., 31க்குள் பதிவு செய்ய வேண்டும் என, மத்திய மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது