இந்தியாவில் சமீபகாலமாக விற்பனை செய்யப்பட்டு வரும் ஸ்மார்ட்போன்களில் ஆதார் ஹெல்பைன் எண்ணான 1800-300-1947 சேர்க்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்களில் உள்ள கூகுள் நிறுவனத்தின் சாப்ட்வேர் மூலம் இந்த எண் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆதார் ஹெல்ப் லைன் எண்ணால், ஸ்மார்ட்போன் களில் உள்ள தகவல்களை திருட முடியும் என சமூக வலைதளங் களில் பரபரப்பாக புரளி கிளம்பி யது. ஆனால், இந்த புகாரை ஆதார் எண்களை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) மறுத் துள்ளது. கவனக்குறைவாக இந்த ஹெல்ப்லைன் எண் ஸ்மார்ட்போன் களில் சேர்க்கப்பட்டது என்று கூகுள் நிறுவனம் விளக்கமும் அளித்தது. இதற்காக கூகுள் நிறுவனம் வருத்தமும் தெரிவித்தது. மேலும் இனி தயாரிக்கப்படும் ஸ்மார்ட் போன்களில் இந்த பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று அந்த நிறுவனம் உறுதியும் அளித்தது.
இந்த நிலையில், யுஐடிஏஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இது ஒரு ஹெல்ப்லைன் எண் மட்டுமே. மேலும், இது யுஐடிஏஐ ஆணை யத்தின் உதவி எண் அல்ல. இது தவிர இந்த எண் மூலம் செல்போன் களில் இருந்து எந்த தகவல்களை யும் திருடமுடியாது. இதனால் இந்த நம்பரை அழிக்க வேண்டும் என்று பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை. தேவைப்பட்டால் யுஐடிஏஐ-யின் புதிய ஹெல் ப்லைன் எண் 1947-ஐ பதிவேற்றம் செய்து கொள்ளலாம். தேவையின்றி ஆதார் நிறுவனம் மீது புரளி கிளப்புவது தவறாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.