indgo_Airlines_10816இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 30 வரையில் உள்நாட்டு விமான கட்டணத்தை வெகுவாக குறைத்துள்ளது.
இதுதொடர்பாக, இண்டிகோ நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களின் படி, ஜம்மு-ஸ்ரீநகர் வழித்தடத்துக்கான குறைக்கப்பட்ட கட்டணமாக ரூ.806 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், டெல்லி- ஜெய்ப்பூர் சிறப்பு சலுகை கட்டணமாக ரூ.908, சென்னை – பெங்களூர் கட்டணமாக ரூ.976 மற்றும் பெங்களூர் – கொச்சி வழித்தடத்துக்கான கட்டணமாக ரூ.1,137-ம் அறிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : Chennai – Bangalore Rs .976 fee: Indigo Airlines announcement