சென்னை : சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 100 சதவீதம் கார் கடனை இனி பெறும் திட்டத்தை ஐசிஐசிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதுள்ள வழிமுறைகளின் படி காருக்கான பகுதி தொகை (குறிப்பிட்ட தொகை) கடனாக வழங்கப்பட்டு வருகின்றது.
வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கார் வாங்குவதற்கான 100 சதவீத கடன் வழங்கும் திட்டம் ஐசிஐசிஐ அறிமுகப்பட்டுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சம் வரை கடனாக பெற முடியும். இதன் மூலம் கார் சாலையில் இயங்கும் வரையிலான செலவு எவ்வளவு, அத்தனைக்கும் சேர்த்து கடனாக வழங்கப்படுகிறது.
இந்த கடன் விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் வாடிக்கையாளருக்கு கிடைத்துவிடும். விழாக்காலம் என்பதால் கார் வாங்க நினைப்போர் எளிதாக கார் வாங்கும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடனை பெற ஐசிஐசிஐ வங்கிக்கு நேரிலோ அல்லது ஐசிஐசிஐ வங்கி கணக்கு வைத்துள்ளோர், அதில் பதிவு செய்துள்ள மொபைல் எண் மூலம் 5676766 எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.