தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை மிகதீவிரமாக பெய்து கனமழை மற்றும் வெள்ளமாக மாறிய நிலையில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை வெள்ளம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு வழக்கமாக நடைபெறும் காலத்தில் நடைபெறவில்லை. ஜனவரி 11 முதல் அரையாண்டு தேர்வுகள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில், மார்ச் -4 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல்-1 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 15- ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

12 வகுப்பு பொதுதேர்வு காலை 9.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெறும் எனவும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 9.15 மணிக்கு தொடங்கி நண்பகல் 12 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ கால அட்டவணையை பள்ளி கல்வித்துறையின் முதன்மை செயலாளர் த.சபீதா அறிவித்துள்ளார்.

12ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை

மார்ச் 4 – ந்தேதி தமிழ் முதல் தாள்
மார்ச் 7 – ந்தேதி தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 9 – ந்தேதி ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 10 – ந்தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 14 – ந்தேதி வேதியியல், அக்கவுண்டன்சி
மார்ச் 17 – ந்தேதி வணிகவியல், மனை அறிவியல், புவியியல்
மார்ச் 18 – ந்தேதி கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி, நியூட்ரீசியன் மற்றும்
மார்ச் 21 – ந்தேதி கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்யூட்டர் சயின்ஸ்,
மார்ச் 23 – ந்தேதி அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல் மற்றும் தொழிற்கல்வி தேர்வுகள்
மார்ச் 28 – ந்தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வர்த்தக கணிதம்
ஏப்ரல் 1 – ந்தேதி இயற்பியல், பொருளாதாரம்

இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு முடிவுடையும்.

10ஆம் வகுப்புதேர்வுக்கான கால அட்டவணை விவரம் வருமாறு:-

மார்ச் 15 – ந்தேதி தமிழ் முதல் தாள்
மார்ச் 16 – ந்தேதி தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 22 – ந்தேதி ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 29 – ந்தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 4 – ந்தேதி கணிதம்
ஏப்ரல் 7 – ந்தேதி அறிவியல்
ஏப்ரல் 11 – ந்தேதி சமூக அறிவியல்
ஏப்ரல் 13 – ந்தேதி சிறுபான்மை இனமொழித்தேர்வுகள்

இந்த தகவலை பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் த.சபீதா தெரிவித்துள்ளார்.

13-ந்தேதி நடைபெறும் சிறுபான்மை இனமொழித்தேர்வுகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண் சான்றிதழில் அச்சிடப்படும். ஆனால் இந்த மதிப்பெண் தேர்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படாது. முதன் முதலாக சிறுபான்மை இன மாணவர்கள் தமிழ் பாடத்தை, முதல் பாடமாக கொண்டு தேர்வு எழுதுகிறார்கள். இது கட்டாயமாகும். தேர்வுகள் காலை 9.15 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12 மணிக்கு முடிவடையும்.

English Summary: 2016 10th and Plus2 Exam Time Tables announced.