சென்னையில் உள்ள காவல்துறையினர்கள் காவல் துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணி ஒழுங்கீனத்தை அடிப்படையாக கொண்டும் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில், நேற்று மேலும் 11 காவல்துறை ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை நேற்று டி.ஜி.பி. அசோக்குமார் வெளியிட்டார். இந்த உத்தரவின்படி சென்னை பெருநகரத்தில் 10 காவல்துறை ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
டி.ஜி.பி அசோக்குமார் அவர்களின் உத்தரவில் கோயம்பேடு உதவி ஆணையர் ஏ.டி.மோகன்ராஜ் சென்னை தெற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவுக்கும், சென்னை தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவின் டி.தங்கராஜு சைதாப்பேட்டைக்கும், சைதாப்பேட்டையின் எஸ்.தம்புசாமி டி.ஜி.பி. அலுவலகத்தின் நவீனமயமாக்கல் பிரிவுக்கும், சென்னை மதுவிலக்குப் பிரிவின் சி.எஸ்.வேலவர் அம்பத்தூருக்கும், அண்ணா நகர் உதவி ஆணையர் கே.சந்திரசேகரன் மாதவரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
பணியிடமாற்றம் செய்யப்பட்ட அனைத்து அதிகாரிகளும் இன்னும் ஓரிரு நாள்களில் தங்கள் புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்வார்கள் என காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
English Summary : 11 more police commissioners transferred from Chennai.