கேந்திரிய வித்யாலயா சங்கதன் மத்திய அரசின் இந்திய கல்வித் துறை அமைச்சகத்தால் நிருவகிக்கப்படும் மத்திய அரசுப் பள்ளியாகும். இங்கு, முதுநிலை ஆசிரியர், தொடக்க கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கேந்திரிய வித்யாலயா சங்கதன் விரைவில் ஆள்சேர்க்கை அறிவிப்பை வெளியிட இருக்கிறது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம், 13,404 காலியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள்: 13,404 (ஆசிரியர் பணி நிலையின் கீழ் 11,747 இடங்களும், ஆசிரியர் நிலை இல்லாத பணி நிலையில் 1,657 இடங்களும் நிரப்பப்பட உள்ளன)
வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து பதவிகளுக்கும், நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடையவராவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு https://kvsangathan.nic.in/ என்ற இணையத்தளத்தில் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 26.12.2022 இரவு 12 மணி வரை.