கடைகளில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் செயற்கை உரங்கள் போட்டு பயிரிடப்படுவதால் உடலுக்கு தீங்கு விளைவிப்பதோடு புதுப்புது நோய்களை உண்டாக்கி வருகிறது. எனவே இயற்கை உரங்களை பயன்படுத்தி வீட்டு மாடியிலேயே காய்கறி தோட்டம் ஏற்படுத்தி அதன்மூலம் பயிராகும் காய்கறிகளை சமைத்து சாப்பிட பொதுமக்களுக்கு அவ்வப்போது அறிவுறுத்தி வருவதோடு வீட்டு மாடியில் தோட்டம் அமைப்பது எப்படி? என்பது குறித்த பயிற்சியையும் அவ்வப்போது வேளாண் பல்கலைக்கழக தகவல் மையம் அளித்து வருகிறது.
இந்த வகையில் வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் அமைக்க ஜனவரி 27 மற்றும் ஜனவரி 28 ஆகிய 2 நாள்களுக்கு வேளாண் பல்கலைக்கழக தகவல் மையத்தில் பயிற்சி தொடங்க உள்ளது. இதுகுறித்து வெளிவந்துள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது, “சென்னை, அண்ணா நகரில் செயல்பட்டு வரும் வேளாண் பல்கலைக்கழக தகவல் மையம் வேளாண் தொடர்பான தொழில்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. குடியிருப்புகளுக்குள் வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் ஆகியவை அமைப்பது, பராமரிப்பது குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மாடித் தோட்டத்தின் மூலம், காய்கறிகள், மூலிகைச் செடிகள் ஆகியவற்றை வளர்ப்பதற்கு ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.
வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை இயற்கை உரம் மூலம் வளர்த்து, பெரும்பாலானோர் பெறுகின்றனர். இதுபோன்ற நூற்றுக்கணக்கான பயிற்சிகள் கடந்த ஆண்டில் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வரும் 27, 28 ஆகிய இரு தினங்களில் காலை முதல் மாலை வரை மாடித் தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளோர் 044-26263484 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம்.
English Summary: 2 days of training for the vegetable garden terrace set in Chennai.