தனக்கு எந்த பட்டமும் தேவையில்லை என்று கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்தை துறந்த அஜீத்துக்கு பட்டங்கள் அவரை தேடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

‘டைம்ஸ் ஆப் இந்தியா’ என்ற இணையதளம் ஒவ்வொரு வருடமும் கோலிவுட்டின் மிகவும் விரும்பப்படும் நாயகன் என்ற பட்டத்திற்கு 25 பேர் கொண்ட பட்டியலை தேர்வு செய்வது வழக்கம். 2014ஆம் ஆண்டின் விரும்பப்படும் நாயகன் என்ற பட்டியலை இன்று காலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ‘தல அஜீத்’ முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த தகவல் வெளிவந்தவுடன் அஜீத் ரசிகர்கள் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் அஜீத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

டைம்ஸ் ஆப் இந்தியா அறிவித்துள்ள இந்த 25 விரும்பப்படும் பட்டியலில் அஜீத்துக்கு அடுத்தபடியாக சூர்யா, தனுஷ், விக்ரம் மற்றும் ஆர்யா ஆகியோர் உள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளையதளபதி விஜய்க்கு 8வது இடமே இந்த பட்டியலில் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டைம்ச் ஆப் இந்தியாவின் 2014ஆம் ஆண்டின் விரும்பப்படும் நாயகர்கள் பட்டியல்:

1. அஜீத்
2. சூர்யா
3. தனுஷ்
4. விக்ரம்
5, ஆர்யா
6. அதர்வா
7. துல்கார் சல்மான்
8. விஜய்
9. வித்யூத் ஜம்வால்
10. விஜய் சேதுபதி
11. சிம்பு
12. அர்மன் இப்ராஹிம்
13. அமிதேஷ் பிரதான்
14. சித்தார்த்
15. அனிருத்
16. கார்த்தி
17. சிவகார்த்திகேயன்
18. ஜீவா
19. விஷால்
20. மாதவன்
21. அஸ்வின்
22. விக்ரம் பிரபு
23. அசோக் செல்வன்
24. கவுதம் கார்த்திக்
25. பரத் ராஜ்