இந்தியன் ரயில்வே அவ்வப்போது ரயில் பயணிகளுக்கு பலவிதமான சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது புதியதாக 25 வகை தேநீரை அறிமுகப்படுத்தியுள்ளது. ரயில் பயணிகளின் வசதிக்காக ஐ.ஆர்.டிசி.டி அறிமுகப்படுத்தியுள்ள இந்த 25 வகையான தேநீர்கள் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) ரயில் பயணிகளின் வசதிக்காக புதிதாக 25 வகையான சுவைகளில் தேநீர் வகைகளை தற்போதுஅறிமுகப்படுத்தியுள்ளது. அத்ரக் துளசி, குல்ஹத், ஹரிமிர்ச், ஹாம் பப்பட், தேன், இஞ்சி, எலுமிச்சை ஆகிய சுவைகள் இவற்றில் அடங்கும். பயணத்தின்போது ஏற்படுத்தும் அலர்ஜிகளுக்கு இந்த தேநீர்கள் நல்ல மருந்தாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கஹ்டு.
மேலும், பயணிகள் இந்த தேநீர்களை பயணிகள் தங்களுக்கு பிடித்த தேநீரை ஆர்டர் செய்து பெறுவதற்காக புதிய மொபைல் ஆப் (செயலி) ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, ஐஆர்சிடிசி நிறுவனம் பிரபல தேநீர் நிறுவனமான சாயோஸ் என்ற நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. அத்துடன், பயணிகள் இணையதளம் வழியாக ரூ.300-க்கு மேல் மதிப்புள்ள உணவை ஆர்டர் செய்தால் அவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும் என ஐஆர்சிடிசி நிறுவனத்தின் தலைவர் அருண்குமார் மனோச்சா தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரயில் பயணிகளுக்கு ஒரு இனிமையான அறிவிப்பு என்றே கருதப்படுகிறது.
English Summary: 25 types of Tea’s introduced in Railway Station. Tea’s will be ordered in Apps.