சென்னை: அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 68.99 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட 275 புதிய பஸ்களை முதல்வர் இ.பி.எஸ்., கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 17; விழுப்புரத்திற்கு 72; சேலத்திற்கு, 43; கோவைக்கு 75; கும்பகோணம் போக்குவரத்து கழகத்திற்கு 68 பஸ்கள் என மொத்தம் 275 பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. இவற்றை துவக்கி வைப்பதன் அடையாளமாக நேற்று தலைமை செயலகத்தில் ஏழு பஸ்களை முதல்வர் இ.பி.எஸ்., கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அனைத்து பஸ்களும் தலைமை செயலகத்திற்கு வெளியே மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தன. புதிதாக துவக்கப்பட்ட பஸ்களில் டிரைவருக்கு மின்விசிறி பொருத்தப் பட்டுள்ளது. இருபுறமும் அவசர வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. புதிய பஸ்கள் துவக்க நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.