சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பள்ளிகள் தொடர்முறையில் இருந்தன. இந்நிலையில் இன்று அதாவது டிசம்பர் 14ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தாலும் சென்னையில் உள்ள ஒருசில பள்ளிகளில் இன்னும் தூய்மைபடுத்தும் பணி நடைபெற்று வருவதால் அந்த பள்ளிகளை தவிர மற்ற பணிகள் இன்றுமுதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அளிக்கப்பட்டுள்ள சென்னைப் பள்ளிகள் விவரம்:-
1. வில்லிவாக்கம் சிட்கோ நகர் அரசு மேல்நிலைப்பள்ளி
2 .சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி
3. சைதாப்பேட்டை திருவள்ளுவர் குருகுல நடுநிலைப்பள்ளி
4. சைதாப்பேட்டை சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளி
5. சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலை, பஜார் சாலையில் உள்ள சென்னை தொடக்க பள்ளிகள்
6. சைதாப்பேட்டை சென்னை உருது தொடக்கப்பள்ளி
7. சைதாப்பேட்டை திடீர் நகர் நடுநிலைப்பள்ளி
8. சைதாப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
9. கிண்டி லயன்ஸ் கிளப் தொடக்கப்பள்ளி
10.நந்தனம் ஓய்.எம்.சி.ஏ., காலேஜ் ஸ்போர்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி
11.நந்தனம் சென்னை தொடக்க பள்ளி மற்றும் சென்னை மேல்நிலைப்பள்ளி
12.சாலிகிராமம் அம்பத்தூர் அரிமா சங்க நடுநிலைப்பள்ளி
13.வடபழனி புலியூர் சென்னை தொடக்கப்பள்ளி, சென்னை மேல்நிலைப்பள்ளி
14.மேற்கு மாம்பலம் சென்னை மேல்நிலைப்பள்ளி
15.ஈக்காட்டுத்தாங்கல் சென்னை தொடக்கப்பள்ளி
16.ஆயிரம் விளக்கு புனித அந்தோனியார் தொடக்கப்பள்ளி
17.ஆயிரம் விளக்கு சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி
18.ஆயிரம் விளக்கு சென்னை நடுநிலைப்பள்ளி
19.ஆயிரம் விளக்கு சென்னை உயர்நிலைப்பள்ளி
20.சின்னமலை புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப்பள்ளி
21.புளியந்தோப்பு சென்னை தொடக்கப்பள்ளி மற்றும் சென்னை உயர்நிலைப்பள்ளி
22.தரமணி சென்னை மேல்நிலைப்பள்ளி
23.அடையாறு காமராஜர் அவென்யூ,
இவற்றுடன் சென்னை தொடக்கப்பள்ளி மற்றும் சென்னை உயர்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பள்ளிகளில் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது. அங்குள்ள பெஞ்சுகள் மற்றும் நாற்காலிகளை வெயிலில் காய வைத்து துடைத்து சுத்தப்படுத்தி வருகின்றனர். இந்த பள்ளிகள் திறக்கும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
English summary-29 Chennai schools remain closed today due to Classrooms and school premises are getting cleaned