அரசு சட்டக் கல்லூரிகளில் மூன்றாண்டு சட்டப் பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு வரும் 13ஆம் தேதி வரை நடை பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு பட்டப்படிப்பில் 1,252 இடங்கள் உள்ளன. இளங்கலைப் பட்டம் முடித்தவர்கள் இந்த படிப்புக்கு தகுதியானவர்கள். இதற்கான கலந்தாய்வு வரும் இன்று தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை அடையாறில் உள்ள சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது.
இதர பிரிவினருக்கு 10-ம் தேதியும், பழங்குடியினர், ஆதி திராவிடர் (அருந்ததியர்), ஆதி திராவிடர் (பிற) ஆகிய பிரிவினர்களுக்கு 11-ம் தேதியும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர் மரபினர், பிற்படுப்படுத்தப் பட்டோர் (முஸ்லீம்) ஆகிய பிரிவினர்களுக்கு 12-ம் தேதியும், பிற்படுத்தப் பட்டோர் (பிற) பிரிவினர்களுக்கு 13-ம் தேதியும் கலந்தாய்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், கட் ஆப் மதிப்பெண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிவு கட் ஆப் மதிப்பெண்
இதர பிரிவினர்கள் 74.333
ஆதி திராவிடர் 68.461
பிற்படுத்தப்பட்டோர் 67.434
பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) 67.086
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 66.720
ஆதி திராவிடர் (அருந்ததியர்) 62.960
பழங்குடியினர் 58.444
English Summary:3 Years law Education Counselling start from Today.