பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான யூடிவி நிறுவனம் தயாரித்துள்ள ‘யட்சன்’ திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முன்னோட்டத்த தற்போது பார்ப்போம்.

ஆர்யா, கிருஷ்ணா, தீபா சந்ந்தி, ஸ்வாதி ரெட்டி நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கியுளார். இவர்தான் கடந்த 2005ஆம் ஆண்டு நடிகர் ஆர்யாவை ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஆர்யாவை வைத்தே விஷ்ணுவர்தன் ஐந்து படங்களை இயக்கியுள்ளார். 2005 முதல் 2015 வரையிலான இந்த பத்து வருடங்களில் ஆர்யா நடித்த அறிந்தும் அறியாமலும்’, பட்டியல், சர்வம், ஆரம்பம், யட்சன் ஆகிய படங்களை விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார்.

அதேபோல் யூடிவி நிறுவனம் ஆர்யா நடித்துள்ள வேட்டை, சேட்டை, புறம்போக்கு ஆகிய படங்களுக்கு பின்னர் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயம் சகோதரர்களின் சூப்பர் ஹிட் வெற்றி படமான ‘தனி ஒருவன்’ படத்திற்கு பின்னர் இந்த படத்தில் பிரபல எழுத்தாளர்கள் சுபா பணியாற்றியுள்ளனர். அதேபோல் ஜெயம் சகோதரர்கள் போலவே இந்த படத்திலும் விஷ்ணுவர்தன் -கிருஷ்ணா சகோதரர்கள் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே இந்த படத்திற்காக யுவன்ஷங்கர் ராஜா கம்போஸ் செய்த பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹாலிவுட் திரைப்படமான ‘லைஃப் ஆப் பை’ (Life of Pi) படத்தில் நடித்த ‘அடில் ஹுசைன்’ இந்த படத்தில் வில்லனாக மிரட்டியுள்ளார். அதைவிட முக்கியமாக இந்த படத்தில் ஆர்யா, அஜீத் ரசிகராக நடித்துள்ளார். அஜீத்தின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது மற்றும் அஜீத்தின் படம் ரிலீஸாகும் முதல் நாள் முதல் காட்சியில் அவருடைய புகழை ஒரு பாடலில் பாடுவது போன்ற காட்சிகளை உள்ளடக்கிய படம். இத்தனை சிறப்பு அம்சங்களை கொண்ட இந்த படம் வெற்றி பெருமா? என்பதை வரும் வெள்ளிக்கிழமை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

English Summary : “Yatchan” movie trailer released.