சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் கொசுக்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. கொசுக்களில் பல வகைகள் இருந்தாலும், ‘ஏடிஸ்’(பகலில் கடிக்கும் கொசுக்கள்) கொசுக்கள் கடிப்பதன் மூலம் ‘டெங்கு’ காய்ச்சலும், ‘கியூலக்ஸ் டர்சாலிஸ்’ கொசுக்கள் மூலம் மூளை காய்ச்சலும், ‘அனாபிளஸ் கேம்பியா’ கொசுக்கள் மூலம் ‘மலேரியா’வும், ‘கியூலக்ஸ் குயின்க்யூபேசியேட்டஸ்’ கொசுக்கள் மூலம் யானைக்கால் நோயும் மனிதர்களிடையே அபாயகரமான நோய்கள் பரவுகின்றன.
இது குறித்து சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை துணை கமிஷனர் டி.ஆனந்த் கூறுகையில், கொசுக்களை விரட்ட கூடிய 384 புகை வெளியிடும் கருவிகள் கொண்டும் நகரில் கொசுக்கள் ஒழிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது என்றும், புகை மூலம் கொசுக்களை கட்டுப்படுத்த கூடிய ‘பைரிதிரியம்’ எனும் வேதிப்பொருள் வாரத்துக்கு 1,400 லிட்டர் என்ற அளவில் பயன்படுத்தப்படுகிறது.சென்னையில் எந்தெந்த பகுதிகளில் கொசுக்கள் தொல்லை அதிகம் இருந்தால் மாநகராட்சி இலவச தொலைபேசி எண்ணான ‘1913’ ஐ தொடர்பு கொண்டு தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
English Summary : Deputy Commissioner of Health Department Mr.T.Anand has taken several actions to kill mosquito’s by introducing 384 new smoking devises to kill mosquito’s.