சென்னை பச்சையப்பன் கல்லூரியில், அன்னம்மாள் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட் சார்பில் நாளை (21.02.15) காலை 8.30 முதல் மாலை 5 மணி வரை இலவச வேலைவாய்ப்பு முகாம் நடக்க இருக்கிறது. ஸ்டார் ஓட்டல்கள், சொகுசு கப்பல் நிறுவனம் பங்கேற்கும் இம்முகாமில், 10, 12ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி, ஓட்டல் மேனேஜ்மென்ட் முடித்தவர்கள், இறுதியாண்டு மாணவர்கள் பங்கேற்கலாம்.

சமையல், ஹவுஸ்கீப்பிங், எச்.ஆர், அக்கவுன்ட்ஸ், இன்ஜினியரிங், சேல்ஸ், மார்க்கெட்டிங், செக்யூரிட்டி, டிரைவர், பிளம்பர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பல துறைகளில் வேலைவாய்ப்பு உண்டு. கல்லூரி, பயிற்சி நிறுவனங்கள் மூலம் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு இலவசமாக உணவு அளிக்கப்படும். பங்கேற்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் 40 பயோடேட்டா’க்கள் கொண்டு வர வேண்டும்.

தொடர்புக்கு : 044-65330070 / 99405 94940.

English Summary : Annamal institute of hotel management sponsors a free placement camp tomorrow at Chennai Pachaiyappas college.