சென்னை பெரு நகர காவல்துறையில் அவ்வப்போது பல்வேறு காரணங்களுக்காக காவல்துறை அதிகாரிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு சென்னை பெரு நகர காவல்துறையில் 47 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து காவல் துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

சட்ட ஒழுங்கு, போக்குவரத்து, ஆயுதப்படை பிரிவு ஆகிய பிரிவுகளில் பணியாற்றிவந்த இந்த மாற்றப்பட்ட 47 காவல்துறை அதிகாரிகளும் இன்னும் ஓரிரு நாட்களில் தங்களுடைய புதிய பொறுப்பை ஏற்கவுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன. ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக பணிபுரிந்த காவல்துறை ஆய்வாளர்கள், நிர்வாக வசதிகள், பணி ஒழுங்கீனம் உள்ளிட்ட காரணங்களால் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

English Summary: 47 Superintendent of Police officers in Chennai Corporation were transferred.