12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பகோணம் மகாமகம் திருவிழா பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி தொடங்குகிறது. இந்த மகாமகம் திருவிழாவிற்கு இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான ஆன்மீகவாதிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து சென்னை மற்றும் கும்பகோணத்திற்கு பேருந்து மற்றும் ரயில் முன்பதிவுகள் முற்றிலும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளை தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாமகம் விழாவிற்காக 350 அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தற்போது துவக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சிறப்பு பேருந்துகளை மகாமகம் திருவிழாவுக்கு செல்பவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. .

இது குறித்து, போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: மகாமகம் விழாவிற்கு, 350 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்து உள்ளோம். முதல் கட்டமாக, 50 சிறப்பு பஸ்களில் முன்பதிவு துவங்கி உள்ளது’ என்று கூறினார்.

English Summary: 350 Special Buses for Kumbakonam Maha Magham. This festival lies once in 12 years.