சென்னை மாநகர காவல்துறையில் நிர்வாக வசதிக்காகவும், காவல்துறை அதிகாரிகளின் விருப்பத்தின் அடிப்படையிலும், பணியின் ஒழுங்கீனம் காரணமாகவும் காவல்துறை அதிகாரிகள் அவ்வப்போது இடமாற்றம் செய்யப்பட்டு வருவது வழக்கமான ஒன்று. இந்நிலையில் தற்போது சென்னை பெருநகர காவல் துறையில் 6 உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. அசோக்குமார் நேற்று உத்தரவிட்டுள்ளார். மேலும் மாநிலம் முழுவதும் அவர் 8 உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை பெருநகர காவல்துறையின் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர்களாக பணிபுரிந்து வந்த சங்கரன், சுந்தரம், ஜெகதீசன், அப்துல்லா உள்ளிட்ட 6 உதவி ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் அனைவரும் ஓரிரு நாட்களில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்பை ஏற்பார்கள் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

English Summary: 6 Police Assistant Commissioners are transferred from Chennai, D.G.P Ashok kumar Chennai order.