சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் நலன் கருதி குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளன. தற்போது மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக குடிநீர் வசதிகள் தேவைப்படும் 2,448 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.48 கோடியே 96 லட்சம் செலவில் சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும்.
இதை சட்ட சபையில் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி ஒரு குடிநீர் சுத்திகரிப்பு கருவியின் விலை ரூ.2 லட்சம். இந்த செலவீனத்தை அந்தஅந்த சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து மேற்கொண்டு கலெக்டர்கள் வாயிலாக இந்த பணிகள் செய்து முடிக்க வேண்டும்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை வெளியிட்டு உள்ளார்.