பிக் பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறியவுடன் டேனியல், தனது காதலி டேனிஷாவை பதிவு திருமணம் செய்துயுள்ளார். இவர் பலப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

“உங்கள் அனைவரிடமும் எனது அழகிய மனைவி டேனிஷா டேனியலை அறிமுகப்படுத்துவதில் சந்தோஷம் கொள்கிறேன். நாங்கள் எளிமையாக பதிவு திருமணம் செய்து கொண்டோம்.

சில குடும்பப் பிரச்சினைகள் காரணமாக இந்த அழகான விஷயத்தை உங்களுடன் இன்றுவரை பகிர முடியவில்லை. கணவன் – மனைவியாக நாங்கள் தொடங்கும் இந்தப் பயணத்துக்கு உங்களுடைய ஆசிகளையும், நல்வாழ்த்துகளையும் கோருகிறோம்” என்று டேனியல் தெரிவித்திருக்கிறார்.

இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *