சென்னை: சென்னையில் ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் விடிய விடிய மழை பெய்தது.
சென்னையில் நேற்று பகலில் வானம் மேகமூட்டத்துடன் கானப்பட்ட நிலையில் மாலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. பின்னர் சென்னை ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, புழல், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் சூடு நீங்கி குளிர்ச்சியான நிலை நிலவியது. மழை காரணமாக ஒரு சிலஇடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளன.
இந்நிலையில் மேலும் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும், வங்க கடல்பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேபோல புதுச்சேரியில் நேற்று பகல் முழுவதும் வெயில் வாட்டி எடுத்த நிலையில் இரவில் பலத்த மழை பெய்தது. புதுச்சேரி நகரம் மற்றும் தவளக்குப்பம், திருக்கனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் இடியுடன் கூடிய காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்ததால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. பலத்த காற்று காரணமாக பல இடங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.