சென்னை, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 23ம் தேதி முதல், காலவரையற்ற, ‘ஸ்டிரைக்’ அறிவித்துள்ள, போக்குவரத்து தொழிற் சங்கத்தினரை, பேச்சு நடத்த வரும்படி, அரசு அழைப்பு விடுத்துள்ளது.’ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய, 7,000 கோடி ரூபாய் நிலுவை தொகையை, உடனே வழங்க வேண்டும்; போக்குவரத்து கழகங்களின் நஷ்டத்தை அரசே ஏற்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை, போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். அரசு கண்டுகொள்ளாததால், வரும், 23ம் தேதி முதல், காலவரையற்ற, ‘ஸ்டிரைக்’ அறிவித்துள்ளனர். அரசுக்கும், முறைப்படி, ‘நோட்டீஸ்’ கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், பேச்சு நடத்த வரும்படி, தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு, தொழிலாளர் நலத்துறை கமிஷனர் அழைப்பு விடுத்துள்ளார். வரும், 22ல், காலை, 11:30 மணிக்கு, தேனாம்பேட்டையில் உள்ள, தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பேச்சு நடக்க உள்ளது. இதில், சுமுக தீர்வு எட்டப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு, தீபாவளிக்கு, ஒரு மாதத்துக்கு முன், 5,000 ரூபாய் முன்பணம் வழங்கப்படும். தீபாவளிக்கு, இன்னும், 20 நாட்களே உள்ள நிலையில், முன்பணம் வழங்கப்படாததால், தொழிலாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.’தீபாவளி முன்பணத்தை, உடனே வழங்க வேண்டும்’ என, தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *