பத்திரப் பதிவு ஆவண நிலையை அறிய இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து பத்திரப் பதிவுத் துறைத் தலைவர் ஜெ.குமரகுருபரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

பத்திரப் பதிவுக்கு ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. ஆவணமானது பதிவுக்குத் தாக்கல் செய்யப்பட்டது முதல் பதிவு செய்த அசல் ஆவணம் திரும்பப் பெறும் வரை ஆவணத்தின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை அறிந்து கொள்ளலாம். அதன்படி, அலுவலகத்துக்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ மட்டுமே தெரிந்து கொள்ளும் நிலை உள்ளது.

இந்நிலையை மாற்றும் விதமாக ஆவணம் பதிவுக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இருந்து திரும்பப் பெறும் வரையிலான ஒவ்வொரு நிலை குறித்தும் பொதுமக்கள் வீண் அலைச்சல் இன்றி தங்கள் வீட்டில் இருந்தபடியே இணையவழியாக எளிதாக அறிந்து கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய வசதியின் வழியாக பொது மக்கள் தங்கள் வீட்டில் இருந்தே பதிவுத் துறையின் ஜ்ஜ்ஜ்.ற்ய்ழ்ங்ஞ்ண்ய்ங்ற்.ஞ்ர்ஸ்.ண்ய் இணையதளத்தில் ஆவணத்தின் நிலை என்ற பிரிவை தேர்வு செய்து தற்காலிக ஆவண எண் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின் முழுமையான எண்ணை அச்சிட வேண்டும். அப்போது, ஆவணத்தின் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் திரையில் தெரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *