அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கு தாழ்த்தப்பட்டோர்(அருந்ததியர்) (முன்னுரிமை பெற்றவர்) மகளிர், (ஆதரவற்ற விதவையர்) என சுழற்சி அடிப்படையில் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: அலுவலக உதவியாளர்

தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி (எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்).

வயதுவரம்பு: 01.11.2018 தேதியின்படி 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: குரூப் டி தரத்திலானது. மாதம் ரூ.15,700 – 50,000

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது சாதி, முன் அனுபவ சான்று, வீட்டு முகவரி, தொலைபேசி எண் ஆகிய விபரங்களுடன் துணை இயக்குநர், முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அம்பத்தூர், சென்னை – 600098 எனும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.11.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய 044-26252453 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *