சந்திராஷ்டமம் நேரம்:
26.10.2018, 02.54 AM முதல் 28.10.2018 06.51 PM வரை சந்திராஷ்டமம் நேரம் ஆகும்
சந்திராஷ்டமம் என்றால் என்ன?
சந்திராஷ்டமம் என்றால் சந்திரன் எட்டாவது ராசியில் இருக்கிறார் என்பது அர்த்தம். ஒவ்வொருவரின் ராசிக்கும் எட்டாவது ராசியில் சந்திரன் இருந்தால் அந்த நாள் சந்திராஷ்டமம். உதாரணமாக மேஷ ராசிக்கு, விருச்சிக ராசி எட்டாவது ராசி. விருச்சிக ராசிக்குரிய நட்சத்திரங்களின் பாதங்களில் அதாவது விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகியவற்றில் சந்திரன் இருக்கும்போது, மேஷ ராசிக்கு சந்திராஷ்டமம். 12 ராசிகளுக்கும் இவ்வாறு சந்திரன் இடம் பெயர்ந்து அவரவர்களுக்கான சந்திராஷ்டம நாளில் செயல்களை மந்தமாக்குகிறார்.
எட்டாம் இடம் என்பது ஜோதிட ரீதியில் தேவையற்ற சிக்கல்களை உருவாக்கும் என்பதால் இவ்வாறு சொல்லப்படுகிறது. சந்திரனின் ஆதிக்கத்தைப் பொறுத்தே ஒருவரின் மனநிலை நிர்ணயிக்கப்படுகிறது. சந்திராஷ்டம காலத்தில் கோபமும் குழப்பமும் ஏற்படும் என்பதாலேயே முக்கிய காரியங்களை அந்த நாளில் செய்ய வேண்டாம் என்று கூறுகிறார்கள். நீண்ட பயணங்கள், புதிய பொருள்களை வாங்குவதுகூட அந்த நாளில் செய்யக் கூடாது. மன உளைச்சல், குழப்பம், மந்தம், பொறுமையின்மை, ஆத்திரம், எரிச்சல், கோபம், இவையெல்லாம் கூடிவரும் சந்திராஷ்டம நாளில் எந்த முக்கிய செயலையும் செய்ய வேண்டாம் என்பது ஜோதிடம் சொல்லும் ஒரு சூட்சும காரணம்.