விடுமுறை நாளான, வரும், 2ம் தேதி, ரேஷன் கடைகள் செயல்பட உள்ளன. தமிழக ரேஷன் கடைகளில், மானிய விலையில், உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த கடைகளுக்கு, மாதத்தின் முதல், இரண்டு வெள்ளிக்கிழமை விடுமுறை. அதற்கு மாற்றாக, அந்த வாரங்களின், ஞாயிற்று கிழமைகளில், கடைகள் செயல்படும்.
தீபாவளியை முன்னிட்டு, ரேஷன் பொருட்கள் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், விடுமுறை தினமான, நவ., 2ல், ரேஷன் கடைகள், வழக்கம்போல் செயல்பட உள்ளன.
தீபாவளிக்கு முந்தைய நாளான, நவ., 5ல், அரசு விடுமுறை அறிவித்துள்ளபோதும், ரேஷன் கடைகள் செயல்பட இருக்கின்றன.இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தீபாவளிக்கு, அனைவருக்கும் பொருட்கள் கிடைக்க, விடுமுறை நாட்களிலும், கடைகள் செயல்படும்; அதற்கு மாற்றாக, வேறொரு நாட்களில், ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படும்’ என்றார்.