தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்ற மக்கள் நேற்று அதிகாலை முதல் சென்னைக்கு திரும்பி வரத் தொடங்கினர். அவர்களின் வசதிக்காக வரும் 10-ம் தேதி வரை மாவட்ட தலை நகரங்களில் இருந்து சென்னைக்கு 4,207 சிறப்பு பேருந்துகள் இயக் கப்படவுள்ளன.
தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாட 10 லட்சத்துக்கும் மேற் பட்டோர் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றிருந்தனர். தீபாவளி பண்டிகை முடிந்துள்ள நிலையில், நேற்று அதிகாலை முதலே மக்கள் சென்னைக்கு திரும்பத் தொடங்கினர். வெளி யூரில் இருந்து வரும் மக்கள் கூட்டம் இன்று அல்லது நாளைக்கு அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற் கிடையே, பொதுமக்களின் வசதிக் காக மாவட்ட தலைநகரங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு வரும் 10-ம் தேதி வரையில் 7,635 சிறப்பு பேருந்துகள் உட்பட 11,490 பேருந்துகள் இயக் கப்படவுள்ளன.
இது தொடர்பாக அரசு போக்கு வரத்து கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது: மக்கள் சென்னைக்கு திரும்பும் வகையில் போதிய அளவிலான பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழக்கமான பேருந்துகளை தவிர, கூடுதலாக வரும் 10-ம் தேதி வரையில் 4,207 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
புறநகர் பகுதிகளில் திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற் பட்டால், பேருந்துகளை பூந்த மல்லி மற்றும் தாம்பரத்துக்கு கொண்டு செல்ல தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். ஜிஎஸ்டி சாலை போன்ற புறநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து போலிஸாருடன், போக்குவரத்து அதிகாரிகள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். சொந்த ஊரில் இருந்து மக்கள் திரும்ப அரசு பேருந்துகளில் இதுவரையில் 71 ஆயிரம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் சிறப்பு பேருந்துகள்: சென்னை மாநகர போக்குவரத் துக் கழக அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘‘தீபாவளி பண்டிகையை யொட்டி சென்னையில் தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட இடங் களுக்கு 250-க்கும் மேற்பட்ட இணைப்புப் பேருந்துகள் நவம்பர் 2 முதல் 5-ம் தேதி வரையில் இயக்கப்பட்டன. இதேபோல், சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்பும் மக்களின் வசதிக்காக புதன்கிழமை முதல், வரும் 10-ம் தேதி வரை 250 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
குறிப்பாக, பிராட்வே, தாம்பரம், திருவொற்றியூர், கோயம்பேடு, வேளச்சேரி. திருவான்மியூர், பூந்தமல்லி உட்பட பல்வேறு இடங்களில் இந்த இணைப்பு பேருந்து களை இயக்கவுள்ளோம்’’ என்றார்.