சென்னை : நவம்பர், டிசம்பர் மாதங்களில் சுற்றுலா செல்வதற்கான திட்டங்கள் பற்றி ரயில்வே நிர்வாகம் தேதி அறிவித்துள்ளது. குறைந்த கட்டணத்தில் ராமாயண யாத்திரை, கோவா சுற்றுலா என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே சுற்றுலாக் கழகம் அறிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு ரூ. 900 கட்டணம் வசூலிக்கப்படுவதாக சென்னை மண்டலத்தில் துணை மேலாளர் ரவிக்குமார் செய்தியாளர்களிடம் கூறினார். +

ராமாயண யாத்திரை ரயில் நவம்பர் 14ம் தேதி மதுரையில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 நாட்கள் மேற்கொள்ளப்படும் இந்த பயணத்திற்கு ரூ.15,830 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 800 பேர் பயணிக்கக் கூடிய இந்த ரயில், ராமாயணத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் புனிதத் தலங்களைக் கடந்து, 15 நாட்களுக்குப் பிறகு ராமேஸ்வரம் வந்து சேரும். மதுரையில் இருந்து சென்னை வழியாக ரேணி குண்டா சென்றடைந்த பின், ஹோஸ்பட் பகுதியில் ராமர் தரிசனம் தொடங்கும்.

பின்னர் நாசிக் ரோடு பகுதியில் ராமாயண காதையின் ஆரண்ய காண்டம் தொடர்பான ஆலய தரிசனம் இடம்பெறும். அயோத்திய காண்டம், பால காண்டத்துடன் தொடர்புடைய திருத்தலங்களுக்கும் இந்த ரயில் செல்லும். இப்பயணத்தின் போது உணவு, தர்ம சத்திரங்களில் உறைவிடம் போன்றவையும் வழங்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *