சென்னை: கஜா புயல் பாதித்த பகுதிகளுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளில் வரும் நிவாரணப் பொருட்களுக்கு லக்கேஜ் கட்டணம் வாங்க வேண்டாம் என்று போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்ற அரசுப் பேருந்துகளில் நிவாரணப் பொருட்களுக்கு லக்கேஜ் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தன்னார்வ அமைப்புகள், சமூக நல அமைப்புகள், தனியார்கள் என பல தரப்பிடம் இருந்து நிவாரணப் பொருட்கள் அரசுப் பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. இவற்றுக்கு லக்கேஜ் சார்ஜ் போடுவதற்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்துத் துறை சார்பில், லக்கேஜ் கட்டணம் வாங்க வேண்டாம் என்று அரசுப் பேருந்துகளை இயக்குநம் நடத்துநர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.