சென்னை மைலாப்பூர் பாரதீய வித்யா பவனில் நேற்று சர்க்கரை நோய் ஆராய்ச்சி மையத்தின் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சீன மருத்துவர் ஹங்சி சியோ, தமிழக இயற்கை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய ஹங்சி சியோ, ‘மருத்துவ முறைப்படி இந்திய கழிப்பறைகள்தான் மிகவும் சிறப்பானது. மேற்கத்திய கழிப்பறைகள் பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்தாலும், அது மனித உடற்கூறுக்கு எதிரானவை என்று கூறினார்.
மேலும் இயற்கையாகவே மனித உடலுக்கு நோய்களை சரிசெய்யும் ஆற்றல் உண்டு என்றும், அதனை சரியான விதத்தில் தூண்டிவிட்டால், எந்த நோயையும் மிக எளிதில் குணப்படுத்தி விடலாம் என்றும் அவர் தெரிவித்தார். இத்தகைய சீன மருத்துவ முறைக்கு சீனாவில் பைடா-லாஜின் என்ற பெயர் உண்டு என்றும் அவர் கூறினார்.