தபால்துறை சார்பில் சி.பி.எஸ் தபால் நிலைய சேமிப்பாளர்களுக்காக இணைய வங்கி சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. விரைவான பண பரிவர்த்தனை வங்கிகளுக்கு இணையாக சேவையை விரிவுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் சி.பி.எஸ்., எனப்படும் ‘கோர் பேங்கிங் சிஸ்டம்’ திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

துரித சேவையின் அடுத்தக்கட்டமாக சி.பி.எஸ்., தபால் நிலைய சேமிப்பாளர்களுக்காக இணைய வங்கி சேவையை தபால்துறை அறிமுகம் செய்துள்ளது. கிளை தபால் நிலையங்கள் தவிர அனைத்து சி.பி.எஸ்., தபால் நிலையங்களில் தனிநபர் கூட்டு சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்போர் இணைய வங்கி சேவைக்கு விண்ணப்பிக்கலாம். அதிகாரிகள் கூறியதாவது: சரியான இ – மெயில் ஐ.டி., மொபைல் போன் மற்றும் பான் கார்டு எண் அடையாள அட்டை முகவரி சான்று சி.ஐ.எப்., ஐடி

ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். சி.பி.எஸ்., இணைப்புக்கு பின் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு துவங்கியோர் கே.யு.சி., விண்ணப்பம் சமர்ப்பிக்க தேவையில்லை. மொபைல் எண் பதிவு ஏ.டி.எம்., கார்டு எஸ்.எம்.எஸ்., வங்கி சேவை வேண்டுதல் விண்ணப்பங்களை பதிவு செய்து இணைய வங்கி சேவையை பெறலாம். சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் தபால் நிலையங்களில் நேரிடையாக சென்று இணைய வங்கி சேவைக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *