சென்னை மாநகராட்சி நிலுவையில் நிற்கும் சொத்து வரிகளை வசூல் செய்வதில் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றானர். மாநகராட்சி அதிகாரிகளின் ஒருசில நடவடிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்துவதாக இருப்பினும் சொத்து வரி திருப்திகரமாக வசூல் செய்யபட்டுள்ளதாகவும், கடந்த சில நாட்களில் மட்டும் ரூ.500 கோடிக்கும் மேல் சொத்து வரியை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வசூலித்துள்ளனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் ஆன்லைன் மூலம் மட்டும் இவ்வருடம் ரூ.1.06 லட்சம் சொத்து வரி வசூலானதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் ரூ.37,192 மட்டுமே ஆன்லைனில் வசூலானது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வருடம் மட்டும் சொத்து வரி செலுத்தியவர்களின் சதவீதம் 2 முதல் 6 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் மூலம் சொத்து வரியை ஐசிஐசிஐ வங்கியின் மூலம் செலுத்தினால் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என சென்னை மாநகராட்சி ஏற்கனவே அறித்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

English Summary : Chennai Corporation Officials collect property tax which result in collection of Rs. 500 crores where Rs. 1.06 lacks was collected through online.