2019-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்தது. 2019-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை பெறும் 112 பேர் அடங்கிய பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பத்ம விபூஷண் விருதுகள் 4 பேருக்கும், பத்ம பூஷண் விருதுகள் 14 பேருக்கும், பத்மஸ்ரீ விருதுகள் 94 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் இருந்து 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
*பங்காரு அடிகளார் – ஆன்மீகம்
*சரத் கமல் விளையாட்டு – டேபிள் டென்னிஸ்
*நார்தகி நட்ராஜ் – கலை
*மதுரை சின்னப்பிள்ளை – சமூகப்பணி
*ஆர் வி ரமணி – மருத்துவம்
*ஆனந்தன் சிவமணி – கலை
*ராமசாமி வெங்கடசுவாமி – மருத்துவம்