டெல்லி: மகாத்மா காந்தியடிகளை நாதுராம் கோட்சேவால் நெருங்க முடிந்தது எப்படி என்ற தகவலை காந்தியின் உதவியாளர் கல்யாணம் தெரிவித்துள்ளார். காந்தியடிகள் கடந்த 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையொட்டி இன்றைய தினம் காந்தியடிகளின் நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
காந்திஜியை கோட்சே எப்படி கொலை செய்தார் என்பது குறித்து அவரது உதவியாளர் கல்யாணம் (96) ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு அண்மையில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் காந்திஜி படுகொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் அரசிடம் இருந்து ரகசிய தகவல் கிடைத்தது.
பாதுகாப்பு வேண்டாம் எனவே காந்தியடிகளுக்கு பாதுகாப்பு அளிக்க அரசு முன்வந்தது. ஆனால் காந்தியோ அதை நிராகரித்துவிட்டார். காந்தி கூறுகையில் எனக்கு பாதுகாப்பு மீது நம்பிக்கை இல்லை. எனவே எனக்கு பாதுகாப்பெல்லாம் வேண்டாம். அதை மீறி நீங்கள் (அரசு) பாதுகாப்பு அளித்தால் நான் டெல்லியை விட்டே சென்றுவிடுவேன் என்றார்.
காந்தி ஒப்புக் கொள்ள படுகொலை ஒரு வேளை பாதுகாப்புக்கு காந்தி ஒப்புக் கொண்டிருந்தால் அவரை சந்திக்க வந்தவர்களையெல்லாம் சோதனை செய்து அனுப்பியிருக்கலாம். காந்தி படுகொலையும் நடக்காமல் இருந்திருக்கும்.
மறக்க முடியாத சம்பவம் பெரிய தலைவர் காந்தியுடனான முக்கியமான மறக்கமுடியாத சம்பவத்தை பற்றி கூறுமாறு கல்யாணத்திடம் கேட்டபோது அவர் கூறுகையில், நீங்கள் மிகப்பெரிய தலைவர் ரயிலில் பயணிக்க உங்களுக்கு டிக்கெட் எதற்கு?’ என்று கூறிய ஒரு ஸ்டேஷன் மாஸ்டரை காந்தி கண்டித்தார்.
தனி பெட்டி தமிழகம் காந்தி பயணம் செய்வதற்காக தனியாக ஒரு பெட்டி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் என்னிடம் பணத்தை தந்து எங்களது ரயில் பயணத்துக்கான மூன்றாம் வகுப்பு டிக்கெட்டை வாங்கி வருமாறு கூறினார் என தெரிவித்த கல்யாணம் தமிழகத்தைச் சேர்ந்தவராவார். அவர் 1943-ஆம் ஆண்டு முதல் காந்தி இறக்கும் வரை உதவியாளராக பணியாற்றினார்.