நெல்லிக்காய் இலை, காய், வற்றல் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்ததாக உள்ள நெல்லிக்கனிகள் பழ வகைகளுள் மிகவும் முக்கியமானவை. நெல்லிக்காய் வற்றல், நெல்லிக்காய் ஊறுகாய் போன்றவை ஆரோக்கியம் தரும் உணவுப் பொருட்களாகும். நெல்லிக்காய் புளிப்பு, இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளைக் கொண்டது. குளிர்ச்சித் தன்மையானது. கண்களுக்குக் குளிர்ச்சி தரும். செரிமானத்தைக் தூண்டும். சிறுநீர் பெருக்கும். குடல் வாயுவை அகற்றும். பேதியைத் தூண்டும்.
உடல்சூடு, எலும்புருக்கி நோய், பெரும்பாடு, வாந்தி, வெள்ளை, ஆண்குறிக் கொப்புளங்கள் போன்றவற்றைக் குணமாக்கும். நெல்லி வேர், நரம்புகளைச் சுருக்கும், வாந்தி, மலச்சிக்கல் ஆகியவற்றைக் குணமாக்கும். நெல்லிக்காய் வற்றல், குளிர்ச்சி தரும்; இருமல், சளி போன்றவற்றைக் குறைக்கும். உடலைப் பலப்படுத்தும். நெல்லிக்காய் தைலம் நாட்டு மருந்துக் கடைகளில் பரவலாக விற்பனை செய்யப்படுகின்றது. இதனைத் தலையில் தேய்த்துத் தலைமுழுகிவர கண்கள் பிரகாசமாக இருக்கும்; பொடுகு கட்டுப்படுவதுடன், முடி உதிர்தலும் தடுக்கப்படும்.
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட நெல்லிக்காய் ஆயுளை அதிகரிக்க கூடியது. ஈரல், எலும்புகளுக்கு பலத்தை கொடுக்கும். சத்துக்கள் நிரம்பிய நெல்லிக்காயை பக்குவப்படுத்தி வைத்து கொண்டு பயன்படுத்துவதால் ஆரோக்கியம் ஏற்படும். நெல்லிக்காய் வேகவைத்து தயிரோடு சேர்த்து பச்சடியாக சாப்பிடும்போது, வயிற்று போக்கு, வெள்ளைபோக்கு பிரச்னைகள் சரியாகும்.
எனவே, எளிதில் கிடைக்க கூடிய நெல்லிக்காயை நாம் அடிக்கடி சாப்பிடுவது நல்லது. நாள்பட்ட கழிச்சல், வயிற்றுபோக்கை குணப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு அவல் அற்புதமான மருந்தாகிறது. அவலில் நீர்விட்டு வேகவைத்து உப்பு, புளிப்பில்லாத தயிர் சேர்த்து கலந்து சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, சீதக்கழிச்சல் ஆகியவை வெகு விரைவில் குணமாகும்.
நெல்லிக்காயை ஊறுகாய் போன்று தயாரித்து உணவில் சேர்த்துக்கொள்வதால் செரிமானம் சீராகும். கல்லீரல் பலப்படும். நெல்லிகாயை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் நோய் நம்மை நெருங்காது.