புதுடெல்லி: பிரதம மந்திரி அவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் வீடுகள் இல்லாத ஏழை மக்களுக்கு 2022–ம் ஆண்டுக்குள் 1 கோடி வீடுகள் கட்டித்தருவது என மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழுவின் தலைவரும், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளருமான துர்கா சங்கர் மிஸ்ரா தலைமையில் 43–வது கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 174 வீடுகளும், புதுச்சேரியில் 1,158 வீடுகளும் உள்பட நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு மேலும் 5 லட்சத்து 60 ஆயிரத்து 695 வீடுகள் கட்டுவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் இதுவரை மொத்தம் 79 லட்சத்து 4 ஆயிரத்து 674 வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.