திருநெல்வேலியில் இருந்து மும்பை சிஎஸ்டி வரை மார்ச், ஏப்ரல், மே ஜூன் ஆகிய நான்கு மாதங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
மார்ச் மாதம் 26ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து ரயில் எண் 01068 என்ற சிறப்பு ரயில் கிளம்பி மார்ச் 28ஆம் தேதி மும்பை சிஎஸ்டியை சென்றடையும்.
அதேபோல் ரயில் எண் 02058 என்ற ரயில் ஏப்ரல் 2,16, 23, 30, மே 7, 14, 21, 28, மற்றும் ஜூன் 4 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மும்பை சிஎஸ்டி சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில் வள்ளியூர், நாகர்கோவில், இரணியல், குழித்துறை, நெய்யாற்றங்கரை, திருவனந்தபுரம், கொல்லம், காயங்குளம், செங்கனூர், திருவல்லம், கோட்டயம், எர்ணாகுளம், ஆலுவா, திருச்சூர், சோரனூர், உடுமி, மூகாம்பிகை சாலை, பத்கல், முருதேஸ்வர், கும்தா, கர்வார், மடகான், கர்மாலி, திவிம், சவாந்த்வாதி, குடால், கன்காவாலி, ரத்னகிரி, சங்கமேஸ்வர், சிப்லுன், கேத், ரோஹா, பான்வேல், தாணே, தாதர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் பயணிகள் இந்த சிறப்பு ரயில்களை பயன்படுத்தி கொள்ளும்படியும் ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
English Summary : Special train announced between Tirunelveli – Mumbai in March, April, May and June.