கமல்ஹாசன் நடித்த ‘உத்தமவில்லன்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்களை விரைவில் வெளியிடவுள்ள பிரபல தயாரிப்பாளர் லிங்குசாமி, தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மூலம் மூன்று படங்களின் இரண்டாம் பாகங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளார்.

விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய ‘சண்டக்கோழி, திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் பிரபு நடித்த ‘கும்கி’ மற்றும் இதே நிறுவனம் விநியோகம் செய்த நட்டி நடிப்பில் வெளியான ‘சதுரங்க வேட்டை’ ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களை தயாரிக்கும் மெகா முடிவை லிங்குசாமி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இவற்றில் சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தை விஷால் நடிப்பில் லிங்குசாமியே இயக்கவுள்ளதாகவும், விக்ரம் பிரபு நடிப்பில் கும்கி இரண்டாம் பாகத்தை பிரபு சாலமன் இயக்குவார் என்றும், சதுரங்க வேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தை வேறொரு புதிய ஹீரோ நடிப்பில் அந்த படத்தின் இயக்குனர் எச்.வினோத் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

English Summary : Lingusamy’s Thirupathi Brother’s production plans to release Sandakozhi, Kumki and Sathuranga vettai second part.