கடந்த 2013ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘தலைவா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போதிலும், அந்த படம் பல இக்கட்டான பிரச்சனைகளை சந்தித்து வெளியானதால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இளையதளபதி விஜய்யும், இயக்குனர் விஜய்யும் மீண்டும் இணையவுள்ளனர். ஆனால் இம்முறை இணைவது திரைப்படத்தில் அல்ல, விளம்பரப்படத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம், கேரளா உள்பட பல பகுதிகளில் முன்னணி நகை நிறுவனமாக விளங்கி வரும் ஜோய் ஆலுக்காஸ் என்ற நிறுவனத்திற்கு நடிகர் விஜய் பிராண்ட் அம்பாசிடராக இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிறுவனம் தயாரிக்க இருக்கும் புதிய விளம்பர படம் ஒன்றை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கவுள்ளதாகவும், அதில் விஜய் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

தற்போது ‘புலி’ படப்பிடிப்பில் பிசியாக உள்ள விஜய், விரைவில் இந்த விளம்பரப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

English Summary ; Director Vijay and Actor joins in the new add for Joyalluka’s.